Tuesday, March 3, 2009

ஏதும் இல்லை... என்னிடம் இப்போது - நீ இல்லாமல்...!!!!

உன்னோடு இருக்கையில் -
உலகமே என் வசமாய் இருந்தது,
உண்மையை உணராமல் போனேன் அன்று -
நீ இல்லையென்றால் உயிர் கூட என்னிடம் இருக்கப் போவதில்லையென்று.

உன் தோளில் சாய்கையில் -
வானம் கூட எல்லையாய்த் தோன்றவில்லை,
வலிக்கும் என்று உணராமல் போனேன் அன்று -
உன் துணையில்லையென்றால் என் நிழலுக்கு கூட இங்கே இடமில்லையென்று.

உன்னுடன் உரையாடும் நொடிகளில் -
கண்ணீர் கூட காயமாகத் தோன்றவில்லை,
கலங்கிப் போவேன் என்று உணரவில்லை அன்று -
கண்ணெதிரில் நீ இல்லையென்றால் சிரிப்பு கூட சித்திரவதை செய்யுமென்று.

என் வாழ்வின் துணையாவாய் என்றுரைக்கையில்
வரையறை ஏதும் வாழ்வில் இல்லையென்று நம்பினேன்,
வாழ்க்கையைத் தொலைப்பேன் என்று உணரவில்லை அன்று -
வாழ்வில் பங்கெடுக்க நீ இல்லையென்றால் வண்ணங்கள் கூட விளங்காய்ப் புதிர்தான்...!!!!!

No comments:

Post a Comment