Tuesday, December 15, 2009

மன்னித்துவிடு...!!!!!

உன்னால் கவிதை எழுத ஆரம்பித்தேன் -
உனக்காக .. உன்னை மட்டுமே - உணர்வால்
உருவகப் படுத்த நினைத்தேன் .....
பிறகே உணர்ந்தேன்,

உயிரற்ற வார்த்தைகள் - உண்மையை உணர்த்தாது...
என் உயிரே - உன்னிடம்
சொல்லித் தெரிய என் காதல்
உலகத்தோடு உய்யப் போவதில்லை....

ஏழு ஜென்மமும் எனக்கு எண்ணத்தில் -
விளங்கப் போவதில்லை - எப்படி, எவ்வாறு
உன்னிடம் இயம்புவதென்று...

எப்படியேனும், ஏதேனும் உன்னிடத்தில்
உணர்த்தியே ஆக வேண்டும் -- என்னசெய்ய
பாவியானேன் நான் -
மானிடனாகி விட்டேன்... மறித்துப் போகும்
மனித பேச்சே மீதமுள்ளது --

ஆதலால்,
மனத்தோடு மட்டுமே மறைத்து விட்டேன் - மண்ணோடு மடியட்டுமென்று
மன்னித்துவிடு...!!!!!

Monday, December 14, 2009

நீ வேறென்று எண்ணவில்லை...

எதிர்ப்புறமாக நீ இருந்தும் -
ஏக்கங்கள் அனைத்தும் எப்போதும் போல
என்னுள்ளேயே....

ஏனோ தெரியவில்லை - எனக்கென்றபோது
எழ மறுகின்றன வார்த்தைகள் எல்லாம்....

தோணும் எண்ணம் எல்லாம் - உன்னைப் பற்றியே
இருந்தாலும் , தொட மறுகின்றன என் விரல்கள்....

பழகிய நாட்கள் ஆயிரம் ஆன போதிலும்
பக்கத்தில் நீ அமர்ந்தால் - பரவசம் மட்டுமே என்னிடம்....

கால் கடுக்க உனக்காக நின்றாலும்
கண நேரம் கூட கோபம் எழுந்ததிலை
காணாமல் இருந்த உன்னை நினைத்து....

மாறாக நினைத்தால், நானே மறைந்து போகிறேன்
உன் நினைவுகளில்....

கிடைத்த கை குலுக்கல்கள் எல்லாம் -
எழும்பும் அலைகளைப் போல, உன்
ஸ்பரிசத்தையே துணை நிறுத்துகின்றது....

எழுதும் எழுத்துக்கள் - உன்னை மட்டுமே
உன் பெயரை மட்டுமே குறிப்பதாய் உணர்த்துகின்றது.....

காதலென்று சொல்ல நியாயமில்லை - ஆனால்
என் காணாமல் போன சிரிப்புகளைக் கண்டெடுத்த உறவு நீ என்றால் -
அது நிஜமன்றி வேறில்லை...

சொல்லித் தெரிவதில்லை உணர்வு -
என் நிழலே நீதான்....

நீ வேறென்று எண்ணவில்லை -
என் நினைவே நீயானாய்.....

உன் நினைவால்.. நான் மீண்டும் பிறந்தவன் ஆனேன்...!!!!!

Tuesday, March 31, 2009

என் காதலே....

நிஜத்தில் நித்திரை கூட நிம்மதியில்லை...
ஆனால் காதலில் -
கனவுகள் கூட காவியம் தான்...

உண்மையில் தலை எழுத்து கூட தெளிவாயில்லை...
ஆனால் காதலில் -
கிறுக்கல்கள் கூட கவிதை தான்...

நிஜத்தில் சிரிப்பு கூட சுகமாய் இருந்ததில்லை...
ஆனால் காதலில் -
கண்ணீர் கூட கண்டெடுத்த செல்வம் தான்...

உண்மையில் தோழமை கூட துணையில்லை...
ஆனால் காதலில் -
என் தனிமை கூட தித்திப்பாய் இருந்தது...

எல்லா சுகத்தையும் தந்தாய் ---
என் காதலே....
அவளை மட்டும் ஏன் தர மறுத்தாய்...?????

Tuesday, March 3, 2009

ஏதும் இல்லை... என்னிடம் இப்போது - நீ இல்லாமல்...!!!!

உன்னோடு இருக்கையில் -
உலகமே என் வசமாய் இருந்தது,
உண்மையை உணராமல் போனேன் அன்று -
நீ இல்லையென்றால் உயிர் கூட என்னிடம் இருக்கப் போவதில்லையென்று.

உன் தோளில் சாய்கையில் -
வானம் கூட எல்லையாய்த் தோன்றவில்லை,
வலிக்கும் என்று உணராமல் போனேன் அன்று -
உன் துணையில்லையென்றால் என் நிழலுக்கு கூட இங்கே இடமில்லையென்று.

உன்னுடன் உரையாடும் நொடிகளில் -
கண்ணீர் கூட காயமாகத் தோன்றவில்லை,
கலங்கிப் போவேன் என்று உணரவில்லை அன்று -
கண்ணெதிரில் நீ இல்லையென்றால் சிரிப்பு கூட சித்திரவதை செய்யுமென்று.

என் வாழ்வின் துணையாவாய் என்றுரைக்கையில்
வரையறை ஏதும் வாழ்வில் இல்லையென்று நம்பினேன்,
வாழ்க்கையைத் தொலைப்பேன் என்று உணரவில்லை அன்று -
வாழ்வில் பங்கெடுக்க நீ இல்லையென்றால் வண்ணங்கள் கூட விளங்காய்ப் புதிர்தான்...!!!!!

Tuesday, February 10, 2009

நீ திரும்ப வாய்ப்பில்லை......

நீ தான் வேண்டுமென்று சொல்ல -
என் நெஞ்சத்திற்கு திடமில்லை.....

நீ இல்லாமல் வாழ் என்று உணர -
என் உணர்வுக்குப் புரியவில்லை....

கணம் ஒன்று உன்னோடு இருக்க -
என் எண்ணம் எல்லாம் விழைகிறது....

கண் முன் நீ நிற்கையில் -
கை கோர்க்க நிஜம் தடங்கல் ஆகிறது...

காதல் உரைக்க காலமெல்லாம் காத்திருந்தேன் -
கடமையோ கடைசி வரை கரை சேர விடவில்லை.....

நீ இல்லையென்று உணர
இன்னும் முடியவில்லை....

நினைக்காமல் இருக்க என் மனமும்
உன்னை மறக்கவில்லை....

பழி சொல்லிப் பயனில்லை -
போனவள் நீ திரும்ப வாய்ப்பில்லை...
நான் வாழவும் வழியில்லை....!!!!

Friday, January 30, 2009

நீ இன்றி...

வாழ்வின் வண்ணங்களை
உன்னுடன் கலந்து வாராய ஆசை தான் - ஆனால்
உண்மைகள் உன்னிடம் சேர விட மறுகின்றது....

வண்ணங்களோ இன்று வடிந்து,
வெறும் கோடுகள் மட்டுமே -
ரணமாய் என் மனத்தில் வலிக்கின்றது...

வருந்திப் பயனில்லை-
உன்னிடம் குற்றம் ஏதுமில்லை-
உண்மைகளை மறைக்க எனக்குத் திடமில்லை..
உன்னை விடவும் மனமில்லை -
இருக்கவும் தகுதியில்லை...!!!!

அறியாதப் புதிர்களால் -
இன்று அன்றாடும்,
நிஜத்தை மறந்து நிற்கிறேன் - நினைவற்று
நிலை மறந்து...

புரியவில்லை ஏனென்று, தெரியவில்லை என்னவென்று -
காலங்கள் கணிக்கட்டும் என் விடவும் தெளிவில்லை...

நான் செய்த செயல்களுக்கு -
விதி மேல் பழி சொல்லிப் பயனில்லை .... வீணாக
நான் போவேன் என்ற முன்வினைக்கு.... வழியில்லை....

புலம்புவதைத் தவிர ...
புதிர்களைப் பார்ப்பதைத் தவிர...
புரிவதற்கு ஒன்றுமில்லை,

கனவுகளின் கோட்டையை தகர்க்க...
காலம் சரியாய் கணித கணம் - அதை
காணவும் கண்களில் உயிரில்லை...

இறுதியில் கண்ணீரில் புலம்புவதைத் தவிர்க்கவும் வழியில்லை -
உண்மையில், கண்களில் ஈரமும் இல்லை.. இனி அழுவதற்கு....

செய்த பாவங்களின் பயன் என்று
பேசாமல் போகிறேன்.....
வாழ்வின் இனிய தருணங்களை தொடக் கூடிய தூரத்தில் இருந்தும்,
வசமாக்கிக் கொள்ள - பாதியம் இல்லாமல்,
தகுதியற்றவனாய்த் தள்ளாடி தனிமையில்....

உள்ள அனைத்தையும் தொலைத்து..
எதைத் தேடி யாசிக்கப் போகிறேன்...
யாரறிவாரோ... எனக்குத் தெரியவில்லை...!!!!

காதல் மட்டுமே என்னைக் கரை சேர்க்குமென்று நினைத்திருந்தேன்...
அறியாமல் போனேன் - துடுப்பு போடத் தகுதியில்லை எனக்கென்று...
இன்று நடுவில் தள்ளாடுகின்றேன் - துணையின்றி...

நீ இன்றி...!!!!

Thursday, January 29, 2009

எண்ணங்களின் வெளிப்பாடு ...

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் .... அதனினும் அரிது, குறைகள் நீங்கி இருப்பது... அனைத்திலும் அரிது... மனிதத் தன்மையோடு வாழ்தல்... தத்துவம் தர விருப்பமில்லை ...
அதை கேட்க பிறருக்கும் நேரமில்லை. :-)

எல்லா மனிதனும் தேடுவது, தன்னை அரவணைக்க ஒரு உள்ளம்.... இல்லையாயின், தான் உரைப்பதை செவி கொடுக்கும் மனம்... இன்னொரு மனிதனின் மனம் இல்லாத போது.. கணினியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியும்....

எனக்கு வாய்த்ததும் அவ்வாறே ... உரைப்பதைக் கேட்பதற்கு , பிரியமானவர்களுக்கு பிடித்திருந்தும்... பாவம் நேரமில்லை...!!!!
சொல்லாமல் இருக்க என்னாலும் முடியவில்லை... இறுதியில் , தேர்வானதோ இது... :-)