Friday, January 30, 2009

நீ இன்றி...

வாழ்வின் வண்ணங்களை
உன்னுடன் கலந்து வாராய ஆசை தான் - ஆனால்
உண்மைகள் உன்னிடம் சேர விட மறுகின்றது....

வண்ணங்களோ இன்று வடிந்து,
வெறும் கோடுகள் மட்டுமே -
ரணமாய் என் மனத்தில் வலிக்கின்றது...

வருந்திப் பயனில்லை-
உன்னிடம் குற்றம் ஏதுமில்லை-
உண்மைகளை மறைக்க எனக்குத் திடமில்லை..
உன்னை விடவும் மனமில்லை -
இருக்கவும் தகுதியில்லை...!!!!

அறியாதப் புதிர்களால் -
இன்று அன்றாடும்,
நிஜத்தை மறந்து நிற்கிறேன் - நினைவற்று
நிலை மறந்து...

புரியவில்லை ஏனென்று, தெரியவில்லை என்னவென்று -
காலங்கள் கணிக்கட்டும் என் விடவும் தெளிவில்லை...

நான் செய்த செயல்களுக்கு -
விதி மேல் பழி சொல்லிப் பயனில்லை .... வீணாக
நான் போவேன் என்ற முன்வினைக்கு.... வழியில்லை....

புலம்புவதைத் தவிர ...
புதிர்களைப் பார்ப்பதைத் தவிர...
புரிவதற்கு ஒன்றுமில்லை,

கனவுகளின் கோட்டையை தகர்க்க...
காலம் சரியாய் கணித கணம் - அதை
காணவும் கண்களில் உயிரில்லை...

இறுதியில் கண்ணீரில் புலம்புவதைத் தவிர்க்கவும் வழியில்லை -
உண்மையில், கண்களில் ஈரமும் இல்லை.. இனி அழுவதற்கு....

செய்த பாவங்களின் பயன் என்று
பேசாமல் போகிறேன்.....
வாழ்வின் இனிய தருணங்களை தொடக் கூடிய தூரத்தில் இருந்தும்,
வசமாக்கிக் கொள்ள - பாதியம் இல்லாமல்,
தகுதியற்றவனாய்த் தள்ளாடி தனிமையில்....

உள்ள அனைத்தையும் தொலைத்து..
எதைத் தேடி யாசிக்கப் போகிறேன்...
யாரறிவாரோ... எனக்குத் தெரியவில்லை...!!!!

காதல் மட்டுமே என்னைக் கரை சேர்க்குமென்று நினைத்திருந்தேன்...
அறியாமல் போனேன் - துடுப்பு போடத் தகுதியில்லை எனக்கென்று...
இன்று நடுவில் தள்ளாடுகின்றேன் - துணையின்றி...

நீ இன்றி...!!!!

Thursday, January 29, 2009

எண்ணங்களின் வெளிப்பாடு ...

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் .... அதனினும் அரிது, குறைகள் நீங்கி இருப்பது... அனைத்திலும் அரிது... மனிதத் தன்மையோடு வாழ்தல்... தத்துவம் தர விருப்பமில்லை ...
அதை கேட்க பிறருக்கும் நேரமில்லை. :-)

எல்லா மனிதனும் தேடுவது, தன்னை அரவணைக்க ஒரு உள்ளம்.... இல்லையாயின், தான் உரைப்பதை செவி கொடுக்கும் மனம்... இன்னொரு மனிதனின் மனம் இல்லாத போது.. கணினியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியும்....

எனக்கு வாய்த்ததும் அவ்வாறே ... உரைப்பதைக் கேட்பதற்கு , பிரியமானவர்களுக்கு பிடித்திருந்தும்... பாவம் நேரமில்லை...!!!!
சொல்லாமல் இருக்க என்னாலும் முடியவில்லை... இறுதியில் , தேர்வானதோ இது... :-)